கட்டுக்கடங்காமல் பரவும் கரோனா!- தேர்தல் ஆணையத்தின் அஜாக்கிரதை தான் காரணமா?

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

கரோனா தொற்று உச்சத்தை எட்டியிருப்பதால், கடைசி மூன்று கட்டத் தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அதனை நிராகரித்தது தேர்தல் ஆணையம். சரி, கடைசி 2 கட்டத் தேர்தல்களையாவது ஒன்றாக நடத்தி முடியுங்கள் என்று கெஞ்சினார் அவர். அதையும் ஏற்காததால், இப்போது கடும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலையானது அபாய கட்டத்தை எட்டும் முன்பே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது என்றாலும்கூட, வாக்கு எண்ணிக்கைக்கு மிகமிகத் தாமதமாக தேதி குறிக்கப்பட்டது பிரச்சினையாகியிருக்கிறது. கரூர் தொகுதி வேட்பாளரான போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘என்னுடைய தொகுதியில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டோம். இவர்களது முகவர்கள் எல்லோரையும் வாக்கு எண்ணும் இடத்தில் அனுமதித்தால், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற முடியாது. கரோனா தடுப்பு விதிகளைத் தீவிரமாகப் பின்பற்றக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு கொடுத்தும் பதில் இல்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, “தேர்தல் பிரச்சாரத்தின் போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்யவில்லை. நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், அரசியல் கட்சிகளிடமும் முறையான நடவடிக்கை இல்லை. உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்துக்காக தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றச்சாட்டுக்கூட சுமத்தலாம்” என்று கடுமையாகச் சாடியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE