வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
கரோனா வைரஸின் முதல் அலை பரவத் தொடங்கியபோது, நான்கு மணி நேர அவகாசத்தில் மொத்த தேசத்தையும் முடக்கும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை, நெருக்கடிகளை, இழப்புகளை நாம் எதிர்கொள்ள நேர்ந்தது. எனினும், ஒப்பீட்டளவில் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்பு குறைவுதான் என்பதால் நாம் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டோம். ஆனால், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கரோனா எனும் அச்சுறுத்தல் நம்மிடையே இருப்பதை ஏறத்தாழ மறந்தேவிட்டோம். நம்மைவிடவும் இன்னும் அலட்சியமாக அதிகாரவர்க்கம் இருந்தது. அதன் விளைவுகளைத்தான் இரண்டாம் அலையில் இன்று எதிர்கொள்கிறோம்.
“இரண்டாம் அலை வரும் என்று எதிர்பார்த்தோம்தான். ஆனால், இத்தனை கடுமையானதாக அது இருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை” என்று மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரே அதிர்ச்சியுடன் சொல்கிறார். எனில், அரசு என்னதான் செய்துகொண்டிருந்தது எனும் கேள்வி தவிர்க்க இயலாததாகிறது.
எங்கும் கண்ணீர்க் கதைகள்