இன்றைய விழிப்பு... நாளைய விடியல்!

By காமதேனு

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

பெருந்தொற்றின் இரண்டாவது அலை நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சமயத்தில், ஆறுதலும் நம்பிக்கையும் சொல்லும் பாடல்களும் படைப்புகளும் நமக்குக் கிடைக்கத்தான் செய்கின்றன. அப்படியான ஒரு விழிப்புணர்வுப் பாடல் இது.

‘கண்ணாடி போன்ற ஒரு வாழ்க்கை…’ எனும் பல்லவியின் முதல் வரியே வாழ்க்கையின் நிலையாமையைச் சொல்கிறது. ஆனா
லும் அடுத்தடுத்த வரிகளில் ‘கண்ணுக்குத் தெரியாத ஓர் உயிர்க்கொல்லியால்’ நம் வாழ்வாதாரமே முடங்கிப்போயிருப்பதை பட்டியலிட்டுக்கொண்டே, அதற்கு எதிராகக் களப்பணியில் முன்நிற்கும் நம்முடைய தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் பணியை நன்றியோடு போற்றுகிறது இந்தப் பாடல்.

அதுமட்டுமல்ல, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையாக இருப்பதன் அவசியம், முகக்கவசம் அணிவதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி, ‘இன்றே நாம் விழித்துக்கொள்வோம்… நாளை விடியல் காணுவோம்’ எனும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE