அன்டிலியாவில் தொடங்கிய மர்மம்!- அம்பலமாகும் அரசியல் - காவல் கள்ளாட்டங்கள்

By காமதேனு

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

பாலிவுட் கதாசிரியர்களின் கற்பனையில் மட்டுமே சாத்தியமான சம்பவங்கள், தற்போது மும்பை செய்திகளாக நித்தம் வெளியாகின்றன. பெருந்தொற்று அதிகரிப்பை அப்பால் வைத்துவிட்டு, அழுக்கு அரசியல்வாதிகளும் காவல் துறை கறுப்பாடுகளும் இணைந்து நடத்தும் கிரிமினல் நாடகங்களே மகாராஷ்டிரத்தில் இப்போது பெரிய அளவில் பேசப்படுகின்றன.

பிப்ரவரி 25 அதிகாலையில் முகேஷ் அம்பானியின் ‘அன்டிலியா’ மாளிகை அருகே, சந்தேகத்துக்கு இடமான ஸ்கார்ப்பியன் கார் ஒன்று நின்றது கண்டறியப்பட்ட கணத்தில்தான் எல்லாமே தொடங்கியது. அக்காரிலிருந்து 20 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் அம்பானி தம்பதிக்கான மிரட்டல் கடிதம் ஆகியவற்றை மும்பை போலீஸார் கைப்பற்றினர். மும்பை க்ரைம் பிராஞ்ச் மற்றும் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு போலீஸார் விசாரிக்கத் தொடங்கிய இந்த வழக்கில், சில தினங்களில் அவர்களை ஓரம்கட்டி தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ முழுதாய்க் களமிறங்கியது. காரணம், இந்த குற்றப் பின்னணியில் மும்பை காவல் துறையின் அதிகாரிகள் சிலரே கைகோத்திருப்பதுதான்!

நடந்தது என்ன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE