கலக்கி எடுக்கும் ‘கரிக்கு’- மலையாள மக்களின் மனம் கவர்ந்த சேனல்!

By காமதேனு

ஜெய்
jeyakumar.r@hindutamil.co.in

மலையாளத்தின் பிரபலமான யூடியூப் சேனலான ‘கரிக்கு’ (karikku) தனது மூன்றாவது ஆண்டைச் சமீபத்தில் கொண்டாடியிருக்கிறது. மழவில் மனோரமா, ஃப்ளவர்ஸ் காமெடி போன்ற நிறுவனம் சார்ந்த யூடியூப் சேனல்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பது கரிக்குதான். 68 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்ட சேனல் இது. இதெல்லாம் வெறும் 77 வீடியோக்களிலேயே சாத்தியமாகியிருக்கிறது. தனி நபரால் தொடங்கப்பட்ட ஒரு சேனலுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது. ‘கரிக்கு’ என்றால் தமிழில் இளநீர் என்று பொருள்!

30 வீடியோக்கள், 10 லட்சம் சந்தாதாரர்கள்

2018-ல் தனது முதல் வீடியோவை வெளியிட்டது இந்தச் சேனல். ஃபிஃபா கால்பந்து போட்டி நடந்த காலகட்டத்தில் அதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட நகைச்சுவை வீடியோ அது. இந்த வீடியோ வெளியிட்ட மாதத்தில் கரிக்குவின் சந்தாதாரர்கள் வெறும் 500 பேர்தான். ஆனால், அடுத்தடுத்த மாதங்களில் அது இரு மடங்காகப் பெருகிக்கொண்டே வந்தது. வெறும் 30 வீடியோக்களைப் பதிவிட்டு 10 லட்சம் சந்தாதாரர்களை எட்டிய ஒரே யூடியூப் சேனல் இதுவாகத்தான் இருக்கும். இப்போது ஒரு வீடியோவுக்குச் சராசரியாக ஒரு கோடி பார்வைகளைச் சாதாரணமாக எட்டிவருகிறது கரிக்கு. சமீபத்தில் இந்தச் சேனல் வெளியிட்ட ‘திருவோணம்’ வீடியோ 2 கோடி பார்வைகளைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE