ஜெர்மனியில் மூடுவிழா காணும் தமிழ்த் துறை!- அறைகூவல் விடுக்கும் ஐரோப்பியத் தமிழர்கள்

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwritez@gmail.com

“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்” என்றார் பாரதியார். அவரது இந்த வார்த்தைகளுக்குப் பின்னே மொழி சார்ந்த ஆழ்ந்த அறிவு பொதிந்துள்ளது. குறிப்பிட்ட இன மக்கள், குறிப்பிட்ட நிலப்பரப்பு எனும் அளவிலேயே ஒரு மொழி குறுகியிருக்கும்பட்சத்தில் அம்மொழி நீடித்து நிலைத்து நிற்பது சந்தேகமே. எந்த ஒரு மொழி பல நாடுகளில் பல்கிப் பெருகி வேரூன்றி இருக்கிறதோ அம்மொழியே சாகா வரம் பெறுகிறது.

புலம்பெயர்த் தமிழர்கள் மூலம் தமிழ் மொழி உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பரவியிருந்தாலும், வெகு சில இடங்களில் மட்டுமே கல்விக் கூடங்கள், பல்கலைக்கழங்களில் அங்கீகாரம் பெற்ற பாடமாக இருக்கிறது. அவற்றில் முக்கியமானது ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகம். இங்குள்ள தமிழ்த் துறை மூடப்படுவதாக வெளியாகியிருக்கும் செய்தி, தமிழ் ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

நிதிப் பற்றாக்குறை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE