திமுக தலைவர்களுடன் அடிக்கடி பேசும் அதிகாரிகள்!- ஆட்சி மாற்றத்தின் அறிகுறியா?

By காமதேனு

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிலைமை இருந்தது. தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்பதை, குறிப்பிட்ட நாளிதழ்களின் செய்திகளில் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை வைத்தே அரசியல் கட்சியினர் அறிந்துகொள்வார்கள். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளை வைத்து அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை அரசியல் கட்சிகள் மோப்பம் பிடித்துவிடுகின்றன. இந்த முறை, தமிழகத் தேர்தல் முடிவை அறிய இன்னும் ஒரு வார காலம் காத்திருக்க வேண்டிய நிலையில், கோட்டையில் அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் நகர்வுகள் குறித்து பரபரப்பாகத் தகவல்கள் கொட்டத் தொடங்கியிருக்கின்றன.

அறிகுறி அறியும் அதிகாரிகள்

பொதுவாகவே பொதுமக்களைவிட அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள்தான் தேர்தல் முடிவை அறிந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள். தேர்தல் முடிவுக்கு முன்பாகவே, முதல்வராக வரவிருக்கும் தலைவரைச் சந்தித்து தங்கள் ஆதரவைக் காட்ட முயற்சிப்பார்கள். இதன்மூலம் நம்முடைய கட்சி ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை அதிகாரிகள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதைக் கட்சிகள் அறிந்துகொள்ள முடியும். கிட்டத்தட்ட இதுவும் தேர்தலில் எந்தக் கட்சி வெல்லப் போகிறது என்பதை அறிந்துகொள்ள கட்சிகள் பின்பற்றும் ஒரு உத்திதான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE