ஸ்ரீவில்லிபுத்தூரில் மாதவராவ் வென்றால் இடைத் தேர்தலில் மகள் போட்டியிடுவாரா?

By காமதேனு

கே.சோபியா
readers@kamadenu.in

தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் திடீர் மரணம், அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

1975 முதலே காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த மாதவராவ், ஒவ்வொரு தேர்தலிலும் தனக்கு சீட் கிடைக்கும் என்று 40 வருடங்களாக எதிர்பார்த்திருந்து ஏமாந்தவர். வாராது வந்த மாமணியாக இம்முறை ஸ்ரீவில்லிபுத்தூர் தனி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக. அந்தத் தொகுதியை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பொன்னம்மாளின் பேத்தி ஜான்ஸிராணி கடுமையாக முயற்சித்தார். ஆனால், தொடர்ந்து ஆட்சியில் இல்லாத நிலையில் வேட்பாளர்களுக்குப் பணம் கொடுக்க கட்சியில் காசில்லை எனவும், வசதியானவர்களுக்கே முன்னுரிமை என்றும் கட்சித் தலைமை அறிவித்தது. அதனடிப்படையில் சீட் பெற்றார் மாதவராவ்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்த இவர், அங்குள்ள பள்ளியில்தான் 12-ம் வகுப்பு வரையில் படித்தார். பிறகு சென்னை பிரசிடன்ஸி கல்லூரியில் பட்டப்படிப்பும், சென்னை சட்டக்கல்லூரியில் பிஎல் படிப்பும் முடித்தவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1986-ல் ராஜீவ் பேரவை தலைவரானார். 1990-ல் இளைஞர் காங்கிரஸின் மாநில செயலாளராக உயர்ந்தார். 1995 வரையில் கட்சியின் சட்ட ஆலோசனைப் பிரிவின் இணைச் செயலாளராக இருந்தவர், அன்றைய மத்திய அமைச்சரும், தென்காசியைச் சேர்ந்தவருமான அருணாசலத்துக்கு நெருக்கமானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE