சோழர் நிழற்படைக்கு நன்றி சொல்லும் கல்வெட்டு!- ராஜகேசரிப் பெருவழியில் ஒரு வரலாற்றுத் தடயம்

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

“காட்டு விலங்குகள் உலவும் ராஜகேசரி பெருவழி வனப்பிரதேசத்தில் சோழ மன்னனைப் போற்றி பொறிக்கப்பட்ட 10-ம் நூற்றாண்டு கல்வெட்டு மறைந்து கிடக்கிறது. அதைப் பார்க்கப்போகிறோம். நீங்களும் வருகிறீர்களா?” என்று தொல்லியல் மற்றும் மலையேறும் குழுவினரிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. காலப் பயணத்துக்கு நிகரான பயணம் என்பதால், மறுபேச்சில்லாமல் நானும் அதில் இணைந்துகொண்டேன்.

பண்டைக்காலத்தில் வணிகம், போக்குவரத்து, படையெடுப்பு, அந்நிய நாட்டு, உள்நாட்டு வணிகப் போக்குவரத்து உள்ளிட்ட உபயோகங்களுக்காக மன்னர்கள் பெருவழிகளை அமைத்தார்கள். கொங்கு மண்டலத்தில் மட்டும் ராஜகேசரிப் பெருவழி, அசுர மலைப் பெருவழி, சோழமாதேவி பெருவழி, அதியமான் பெருவழி உள்ளிட்ட இருபது பெருவழிகள் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. இப்போது இவற்றில் ஒன்றுகூட பயன்பாட்டில் இல்லை. ராஜகேசரிப் பெருவழியும் அந்த லிஸ்டில் தான் இருக்கிறது!

தொல்லியல் சாலை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE