நாட்டுப்புறக் கலைஞர்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள்!- டாக்டர் காளீஸ்வரன் ஆதங்க பேட்டி

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தற்போது தீவிரமாகப் பரவிவரும் நிலையில், மதம் சார்ந்த திருவிழாக்களை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தத் தடை விழுந்தி ருப்பதால் வேதனையில் துடிக்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள், ஆட்சியர்களைச் சந்தித்து திருவிழா தடையை நீக்கக்கோரி மனுக் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், அரசின் இந்த தடை அறிவிப்பால் பல ஆயிரம் நாட்டுப்புறக் கலைஞர்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கி நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள் என்று எச்சரிக்கிறார், மாற்று ஊடக மையத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் காளீஸ்வரன். நாட்டுப்புறக் கலைஞர்களை ஒருங்கிணைப்பது, நலவாரியத்தில் சேர்த்து அவர்களுக்கான நலத்திட்டங்களைப் பெற்றுத்தருவது எனத் தொடர்ந்து இயங்கிவரும் அவருடன் ஒரு பேட்டி.

திருவிழாவுக்குத் தடை விதிப்பதன் மூலம் நாட்டுப்புறக் கலைஞர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்?

பெரும்பாலும் சித்திரை தொடங்கி ஆவணி வரைக்கும்தான் கோயில் திருவிழாக்கள் நடக்கும். நாட்டுப்புறக் கலைஞர்கள் இந்தக் காலகட்டத்தில் சம்பாதித்தால்தான் உண்டு. மாதத்தில் குறைந்தது 20 நாட்களுக்கு வேலை கிடைக்கலாம். நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பார்கள். ஐந்து அல்லது ஆறு மாதங்களில் அதிகபட்சம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதை வைத்துக்கொண்டு மீதமுள்ள ஆறு மாத காலத்தைக் கழிப்பார்கள். கையிருப்புப் பணம் செலவானதும் வட்டிக்கு வாங்கி காலத்தை ஓட்டுவார்கள். சீஸன் ஆரம்பமானதும் கிடைக்கும் வருமானத்தில் வட்டியும் கட்டி அசலையும் திருப்பிக் கொடுப்பார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE