ஈஷா யோகா மையத்தை அரசுடமையாக்க வேண்டும்!-  ஜக்கி வாசுதேவுக்கு எதிராக அணிதிரட்டும் பெ.மணியரசன்

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

தமிழக கோயில்களை பக்தர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவின் குரலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது தெய்வத் தமிழ் பேரவை அமைப்பு. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில், சென்னையில் கூடிய தெய்வத்தமிழ் பேரவையினர் ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியதுடன் அதனை அரசுடமையாக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். இந்தக் கோரிக்கை உட்பட மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சையில் மே 8-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று பேரவையினர் அறிவித்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசனிடம் இதுகுறித்துப் பேசினேன்.

இப்படி ஒரு அமைப்பை திடீரென ஏற்படுத்தக் காரணம் என்ன?

திடீரென ஏற்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றபோது, தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. அப்போதே ஒத்தக்கருத்து உடையவர்களை ஒன்றுதிரட்டி இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணினோம். அதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்துவந்தேன். பிப்ரவரி மாதம் அமைப்பு உருவாக்கப்பட்டது. இப்போது அதன் தேவை முக்கியமாகியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE