இசைவலம்: புன்னகையின் சீமந்தப்பூ!

By காமதேனு

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

‘மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உருமாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே…’
‘மலர் கொடுத்தேன் கைகுலுங்க வளையலிட்டேன்...’
‘நான் தாயுமானவன் தந்தையானவன்…’

இவை எல்லாமே காலம்காலமாக நம்முடைய பண்பாட்டின் அடையாளமாகப் பெண்ணுக்கு வளைகாப்பு நடக்கும்போது, தமிழ் சினிமாவின் பல காலகட்டங்களில் ஒலித்த பாடல்கள். புராணகாலப் படங்கள் தொடங்கி சமூகக் கதைகளைக் களமாகக் கொண்ட படங்கள் வரை மனித உறவுகளைத் தாலாட்டும் திரைப்படங்களாக அவை இருந்தன.

கடந்த சில ஆண்டுகளாக அப்படிப்பட்ட பாடல்களுக்கான சூழல் தமிழ் சினிமாவில் காண முடியாத நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் ‘99 சாங்ஸ்’ திரைப்படத்தில் வளைகாப்புப் பாடலொன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருக்கிறது. ரஹ்மான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் இது. தமிழ் உட்பட மூன்று மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சீமந்தப்பூ இவளே’ பாடலில், கருவுற்ற பெண்ணை வித்தியாசமான சொல்லாட்சியைப் பயன்படுத்தி வர்ணித்திருக்கிறார் குட்டி ரேவதி. விரல்விட்டு எண்ணிவிடும் அளவுக்கே திரையிசையில் பயன்படுத்தப்படும் ‘மிஸ்ரம்’ எனும் தாளகதியில் இந்தப் பாடலை அமைத்திருக்கிறார் ரஹ்மான். தேவைக்கேற்ப வாக்கியத்தின் நீளத்தைக் கூட்டவோ குறைத்தோ கொள்ளலாம். இந்தத் தாளத்தில் அமையும் பாடலுக்கு இது இன்னொரு சிறப்பு. பாடல் உருவானபோது ஏற்பட்ட அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் குட்டி ரேவதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE