ஹாட் லீக்ஸ்: தேவர் கைவிட்டாலும் தேவேந்திரர் கைவிடல!

By காமதேனு

கே.என்.நேருவுக்கு அறநிலையத் துறையாம்!

ஆட்சி எங்களுக்கே என மார்தட்டும் திமுகவின் முக்கிய வேட்பாளர்கள் பலரும் அமைச்சர் பதவிக்கு ஆளாய் பறக்கிறார்கள். திருச்சியில் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவருக்கும் அமைச்சர் பதவி நிச்சயம் என்று பேசப்படும் நிலையில், இவர்களுக்கு ஊடாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுடன் மோதிய கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜும் அமைச்சர் கனவில் மிதக்கிறாராம். “அண்ணன் தான் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்” என்று இனிகோவின் ஆட்கள் இனிப்பாக பேச, “எங்காளுக்கு இந்த முறை அறநிலையத் துறை அமைச்சர் பதவியாம்” என்று நேர்பட பேசுகிறது நேரு வட்டாரம். “அப்போ... போக்குவரத்து?” என்று கேட்டால், “அது டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு” என்று பட்டென பதில் வருகிறது. கருணாநிதியின் திருவாரூரில் போட்டியிட்ட பூண்டி கலைவாணனுக்கும் அமைச்சராகும் ஆசை எட்டிப் பார்க்கிறதாம்.

பலமான யோசனையில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ

பட்டுக்கோட்டை அதிமுக எம்எல்ஏ-வான சி.வி.சேகர், மண்டல பொறுப்பாளரான வைத்திலிங்கத்தை ஓவர்லுக் செய்து சிலபல காரியங்களைச் செய்தாராம். வைத்தியிடமே சொல்லாமல் தனது மகன் திருமணத்துக்காக எடப்பாடியாரை பைபாஸில் பட்டுக்
கோட்டைக்கு அழைத்து வந்தார் சேகர். எடப்பாடியாரே தனது வீட்டு விசேஷத்துக்கு வந்து போனதால் மீண்டும் தனக்கு சீட் நிச்சயம் என நம்பிக் கொண்டிருந்தார் சேகர். ஆனால், பேச வேண்டிய நேரத்தில் பேசவேண்டிய விதமாகப் பேசி தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்கவைத்து சேகருக்கு செக்வைத்து விட்டாராம் வைத்தி. இதனால் இனிமேல் அதிமுகவில் குப்பைகொட்ட முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்ட சேகர், அறிவாலயத்துப் பக்கம் போய்விடலாமா என ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE