இனி ‘தேசபக்தர்கள்’ மட்டுமே போட்டியிடலாம்!- ஹாங்காங் தேர்தல் முறையைச் ‘சீர்திருத்தும்’ சீனா

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

ஹாங்காங்கில் பெயரளவுக்கு இருந்த ஜனநாயகத்துக்கும் ஒட்டுமொத்தமாக முடிவுகட்டியிருக்கிறது சீனா. ஹாங்காங் தேர்தல் முறையில் சீன நாடாளுமன்றம் கொண்டுவரும் ஒட்டுமொத்த மாற்றம், தேசபக்தர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கும் என்பதுதான் அதிர்ச்சி தரும் விஷயம். இது, ஜனநாயக ரீதியிலான சக்திகளையும் எதிர்க்கட்சிகளையும் பலவீனமான நிலைக்குத் தள்ளிவிடும் எனும் கவலை எழுந்திருக்கிறது. கூடவே, இந்தச் சீர்திருத்தம் சீனாவின் பாதுகாப்புப் படைகளுக்கே வானளாவிய அதிகாரத்தைத் தரக்கூடியது எனும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மார்ச் 11-ல் ஹாங்காங் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான சட்ட மசோதா சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குறித்து விவாதித்த நாடாளுமன்ற நிலைக்குழு இதை அப்படியே ஏற்றுக்கொண்டது. அதாவது, நிலைக்குழுவில் அங்கம் வகிக்கும் 167 பேரும் ஒருமனதாக இதை ஆதரித்திருக்கின்றனர். இனி, சீன அரசுக்கு எதிரான கொள்கை கொண்டவர்கள் தேர்தல் கமிட்டியிலோ அல்லது சட்டப்பேரவையிலோ இடம்பெற முடியாது என்று நிலைக்குழுவினர் பெருமிதத்துடன் சொல்கின்றனர். இதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

கேள்விக்குறியாகும் ஜனநாயகம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE