விஜய் வசந்த் Vs பொன்னார்- குமரியில் கொடிநாட்டப்போவது யார்?

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களேபரங்களுக்கு நடுவில், மிகுந்த கவனம் ஈர்க்கிறது கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் களம். “நீங்கள் மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கப்போகிறீர்களா அல்லது மத்திய அமைச்சரை உருவாக்கப் பேோகிறீர்களா?” எனப் பொன்.ராதாகிருஷ்ணனுக்காகப் பரப்புரை செய்கின்றனர் பாஜகவினர். “என் தந்தை வசந்தகுமார் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வதுதான் என் லட்சியம்” என சென்டிமென்ட் பிரச்சாரம் செய்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த். வெற்றிவாய்ப்பு யாருக்கு?

‘வளர்ச்சி’ தந்த வீழ்ச்சி

2019 மக்களவைத் தேர்தலின்போது வளர்ச்சியின் நாயகன் என பொன்.ராதாகிருஷ்ணனை முன்னிலைப்படுத்தியது பாஜக. ஆனால், 2014 தேர்தலில் வெற்றிபெற்று மத்திய அமைச்சரான பொன்னார், வளர்ச்சி எனும் பெயரில் கொண்டுவந்த பல திட்டங்களும் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகக் கடும் அதிருப்தி எழுந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE