முந்துவது யார்?- முன்னாள் அமைச்சர்களின் தொகுதி நிலவரம்

By காமதேனு

என்.பாரதி
readers@kamadenu.in

கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாகக் கோலோச்சியவர்கள், கடந்த தேர்தலில் வெற்றிபெற்றபோதும் எம்எல்ஏ-க்களாக மட்டுமே வலம் வந்தனர். அவர்கள் அனைவருமே இம்முறையும் வென்றால், அமைச்சர் பதவி நிச்சயம் என்ற நினைப்பில் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சுரேஷ்ராஜன், அனிதா ராதாகிருஷ்ணன், பூங்கோதை ஆலடி அருணா, கீதா ஜீவன் ஆகியோரின் வெற்றிவாய்ப்பு குறித்து அறிய, அவர்களின் தொகுதிகளை வலம்வந்தேன்.

திராவிடத்தை மிரட்டும் தேசியம்

நாகர்கோவில் எம்எல்ஏ-வான சுரேஷ்ராஜனை எதிர்த்து, பாஜக வேட்பாளராக களம் காண்கிறார் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.ஆர்.காந்தி. எதிர்க்கட்சி வரிசையில் நின்றதால், சுரேஷ்ராஜனால் தொகுதிக்குள் குறிப்பிடத்தக்க திட்டங்கள் எதையும் கொண்டுவர முடியவில்லை. நகரின் மையப்பகுதியில் இருக்கும் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கு இடமாற்றம் செய்யப்படும் என்று தேர்தலின்போது கொடுத்தவாக்குறுதியைக்கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE