கோட்டையில் மீண்டும் அண்ணாச்சியின் கொடி?- அருப்புக்கோட்டை தொகுதி நிலவரம்

By காமதேனு

கே.சோபியா
readers@kamadenu.in

எம்ஜிஆர் முதல் முறையாக அருப்புக்கோட்டை தொகுதியில் வென்றபோது, பக்கத்துத் தொகுதியான சாத்தூரில் எம்எல்ஏ ஆனவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அண்ணாச்சி. 1977இல் தொடங்கி இதுவரையில் 7 முறை எம்எல்ஏவாகியிருக்கும் அண்ணாச்சி, அதிரடிக்கும் வள்ளல் தன்மைக்கும் பெயர் போனவர். இப்போது அதிரடி குறைந்து, வள்ளல் தன்மை இன்னும் கூடியிருக்கிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஏற்கெனவே 5 முறை அமைச்சராக இருந்தவர், வென்றால் இம்முறையும் அமைச்சர்தான் என்பதால், கொஞ்சம் கூடுதலாகவே உழைக்கிறார். வெல்வாரா?

தொகுதி மாறிய அண்ணாச்சி

சாத்தூர் தொகுதி எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்ட பிறகு அருப்புக்கோட்டை தொகுதிக்கு மாறிய அண்ணாச்சி, இரண்டாவது முறையாக அதே தொகுதியில் களமிறங்கியிருக்கிறார். காரணம், தெலுங்கு பேசும் சாதியினர் இப்போது இங்கேதான் அதிகம். தெலுங்கு செட்டியார், மறவர், ரெட்டியார், முத்தரையர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதி இது. விவசாயமும், நெசவுமே பிரதான தொழில்கள். கணிசமான அளவுக்கு நூற்பாலைகளும் இயங்குகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE