ஒட்டப்பிடாரத்தில் ஒத்தையில் நிற்கும் கிருஷ்ணசாமி!- தனி ஆவர்த்தனம் கைகொடுக்குமா?

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் ஒட்டப்பிடாரம்  (தனி) தொகுதியில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் தனித்து களமிறங்கியிருக்கிறார். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஆவேசத்துடன் களமாடிவரும் தேர்தல் களத்தில், அக்கட்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் டாக்டர் திணறிவருவதை சொந்தக் கட்சியினரே பரிதாபமாகப் பார்க்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவந்த கிருஷ்ணசாமி, இந்தத் தேர்தலில் தனித்தே களம் காண்பது அக்கட்சியினருக்குக் கூடுதல் சோர்வைக் கொடுத்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஒட்டப்பிடாரம் தொகுதியில், இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக அதிகபட்சமாக நான்கு முறையும், திமுக மற்றும் புதிய தமிழகம் கட்சிகள் தலா இரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. கடந்தமுறை இங்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜன் வெற்றிபெற்றார். அப்போது திமுக கூட்டணியில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, வெறும் 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். 2019-ல், இத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் திமுகவின் சண்முகைய்யா வென்றார். அப்போது அதிமுக சார்பில் போட்டியிட்ட மோகனுக்கு ஆதரவாக கிருஷ்ணசாமி வாக்கு சேகரித்தார். ஆனாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. முப்பது ஆண்டுகளுக்குப் பின் இடைத்தேர்தலில் வென்று ஒட்டப்பிடாரத்தைத் தன் வசமாக்கியது திமுக.

கடைசி நேர முடிவு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE