க.விக்னேஷ்வரன்
vigneshwritez@gmail.com
1895-ல் லூமியர் சகோதரர்கள் திரையிட்ட காட்சித் துண்டில் ஆரம்பித்த சினிமாவின் பயணம், இன்று உலகம் முழுதும் பரந்து விரிந்து, மானுட வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சினிமாவின் தாக்கம் மிகவும் காத்திரமானது. இங்கே, சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்ற வரையறையைக் கடந்து, சமூகத்திலும் அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பெரும் காரணியாக இருக்கிறது. சினிமாவின் மூலம் கிடைக்கும் புகழை அரசியலில் அறுவடை செய்யலாம் என்ற உத்தியைத் திறம்பட எம்ஜிஆர் செய்துகாட்டினார். சினிமா எனும் நுழைவாயில் வழியாக ஆட்சிக் கட்டிலில் முதலமைச்சராக எம்ஜிஆர் அமர்ந்தது 1977-ல்.
அதன் பிறகு பலரும் அவரது வழியில் அரசியலில் காலடி எடுத்துவைத்து, கடைசியில் காமெடி பீஸ் ஆனதுதான் மிச்சம். எம்ஜிஆருக்குக் கைகொடுத்த உத்தி மற்றவர்களுக்கு ஏன் உதவவில்லை?
முக்கிய வித்தியாசம்