மீண்டும் ட்ரெண்டிங்கில் ‘#கோபேக்மோடி’

By காமதேனு

எப்போதும் இல்லாத விநோதமாக, கூட்டணியில் இருக்கும் பாஜக தலைவர்கள் படத்தையும், சின்னத்தையும் போட்டு ஓட்டுக் கேட்டால் விழுகிற ஓட்டும் விழாதோ என்ற அச்சத்தை அதிமுகவினரிடம் பார்க்க முடிகிறது. அதிமுக - பாஜக கூட்டணியின் இந்த நிலையை நெட்டிசன்கள் நன்றாகவே கிண்டலடிக்கிறார்கள். “ஊராடா இது... சொந்தக் கட்சியோட தேர்தல் அறிக்கையை சொல்ல முடியல... சின்னத்தையும், தலைவர் படத்தையும் காமிச்சி ஓட்டுக் கேட்க முடியல...” என்று ஒருபக்கம் கட்சியினர் புலம்ப, ‘போட்டி போடுறது பிஜேபி வேட்பாளர்... ஆனா, போஸ்டர்ல இருக்கிறது எல்லாம் அதிமுக தலைவர்கள். நல்லா இருக்குடா உங்க டீலிங்...’ என்று இன்னொரு பக்கம் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கிறார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேல் போய், ‘மோடியின் படத்தைப் போட்டு போஸ்டர் அடித்த பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் - இப்படி ஒரு செய்தி வந்தாகூட ஆச்சரியமில்லை’ என்கிறார்கள். இதற்கிடையில், பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்த பிரதமரை வழக்கம்போல #கோபேக்மோடி ஹேஷ்டேகில் மீம்ஸ்களூம், கருத்து
களும் பதிவிட்டு தெறிக்கவிட்டார்கள் நெட்டிசன்கள். இதில் #கோபேக்மோடி ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்வதில் திமுக, அதிமுக, பாஜக இடையே கடும் போட்டி வேறு!

மக்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பதால் மோடிஜிக்கு தூக்கம் வரவில்லை.- குஷ்பு

என்ன செய்ய போறாரோன்னு எங்களுக்கும் தூக்கம் இல்லை!- நெல்லை அண்ணாச்சி

மாட்டு வண்டி ஓட்டி வாக்குச் சேகரித்த வானதி சீனிவாசன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE