வெற்றி நடைபோடும் வேல்முருகன்!- பண்ருட்டி தொகுதி: ஒரு பார்வை

By காமதேனு

எம்.கபிலன்
readers@kamadenu.in

தமிழ்நாடு டெய்லர்ஸ் கட்சி தொடங்கி, காங்கிரஸ், திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் வரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற தொகுதி பண்ருட்டி. 1967 தேர்தலிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் இந்தத் தொகுதியைத் தன்வசப்படுத்திக்கொண்டார். அப்போது காங்கிரஸ் வேட்பாளராக நின்று வெற்றிபெற்றார்.  அதற்கடுத்த 1971 தேர்தலில் அவரே திமுகவின் வேட்பாளராகக் களமிறங்கி வென்றார். அதற்கடுத்து அதிமுகவுக்குப் போய் 1977, 1980, 1984 ஆகிய தேர்தல்களில் தொடர் வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்தார்.

மீண்டும் வந்த வேல்முருகன்

சற்று இடைவெளிக்குப் பிறகு 1991-ல் பாமக வேட்பாளராகவும் களமிறங்கி பாமகவுக்கான முதல் வெற்றியைப் பதிவுசெய்தார் பண்ருட்டியார். அந்த வெற்றிக்கு, இளைஞராக இருந்த வேல்முருகனின் வேகமான செயல்பாடுகளும் ஒரு காரணம். அதனால் 2001-ல் அதிமுகவோடு கூட்டணியில் இருந்த பாமக, பண்ருட்டியில் போட்டியிட வேல்முருகனுக்கு வாய்ப்பளித்தது. வெற்றிபெற்ற வேல்முருகன் அதற்கடுத்த 2006 தேர்தலிலும் திமுக கூட்டணியில் பாமக சார்பில் நின்று வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE