பிரைட் ஆவாரா பிரேமலதா?- விருத்தாச்சலம் விறுவிறு நிலவரம்

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

வந்தாரை வாழவைக்கும் தொகுதி என்று அழைக்கப்படும் தொகுதி விருத்தாசலம். இதுவரை உழைப்பாளர் கட்சி, ஜனதா, சுயேச்சை, காங்கிரஸ், திமுக, அதிமுக, பாமக, தேமுதிக என அனைத்துக் கட்சிகளும் கலந்துகட்டி இங்கு வெற்றிபெற்றுள்ளன. பெருமளவு கிராமங்கள் நிறைந்த இத்தொகுதியில், இந்த முறை பெரும் நம்பிக்கையோடு களமிறங்குகிறார் தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா.

தேமுதிகவுக்கு முக்கிய தொகுதி

விஜய்காந்துக்கு முதல் தேர்தல் வெற்றியைத் தந்த தொகுதி எனும் வகையில் விருத்தாசலம், தேமுதிகவுக்கு மிக முக்கியமான தொகுதி. கட்சி ஆரம்பித்து தங்கள் பலம் என்னவென்று தெரியாத நிலையில், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்தார் விஜயகாந்த். அப்போது பாமகவுடன் மோதிக் கொண்டிருந்த அவர், வன்னியர்கள் அதிகம் வசிக்கும் இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்தது தவறு என்று பலரும் அவருக்குச் சுட்டிக்காட்டினார்கள். ஆனால், ‘கேப்டன்’ அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. நின்றார். வென்றார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE