ஜெயிச்சா மந்திரி! - கணக்குப் போட்டுக் காய் நகர்த்தும் எச்.ராஜா

By காமதேனு

குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிடுவதால் இம்முறை காரைக்குடி தொகுதிக்கும் விஐபி அந்தஸ்து யோகம் அடித்திருக்கிறது.

சிதம்பரத்தை எதிர்க்க பிரியப்படும் ராஜா! 

வழக்கமாக, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடத்தான் அதிகம் பிரியப்படுவார் எச்.ராஜா. சிதம்பரத்தின் நிதிக் கொள்கைகளைப் பிடிக்காத வடநாட்டு தொழிலதிபர்களும் ராஜாவுக்காக தாராளமாக நிதிக்கொடை கொடுப்பார்கள். ஆனால், இதுவரை இரண்டு தேர்தல்களில் சிதம்பரத்தையும் கடந்த முறை அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தையும் எதிர்த்துக் களம் கண்டிருக்கும் ராஜா, ஒருமுறைகூட ஜெயிக்கவில்லை. அதேபோல், காரைக்குடி (2001), ஆலந்தூர் (2006), டி.நகர் (2016) சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட ராஜா, காரைக்குடியில் மட்டும் வெற்றிவாகை சூடியிருக்கிறார். அந்த நம்பிக்கையில் இப்போதும் காரைக்குடி களத்துக்கு வந்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE