தேசிய விருது சர்ச்சை!

By காமதேனு

2019-ல் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. தமிழில் ‘அசுரன்’ சிறந்த படமாகத் தேர்வானது. தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்தது. பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு சிறப்பு நடுவர் விருது கிடைத்தது. இந்த விருதுகள் குறித்து எந்த சர்ச்சையும் ஏற்படவில்லை. ஆனால், சிறந்த இசைக்கான விருது விஸ்வாசம் படத்துக்காக டி.இமானுக்கு வழங்கப்பட்டது குறித்து இணையத்தில் பரவலாக சர்ச்சையானது. விருது வழங்கும் அளவுக்கு சிறப்பான இசை அல்ல என்பது பெரும்பாலானோர் கருத்தாக இருந்தது. அதேசமயம், ஜி.வி.பிரகாஷ்குமார், அனிருத், யுவன் ஆகியோரின் இசையைக் கணக்கில் எடுத்துக் கொண்டார்களா இல்லையா என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர். இது தொடர்பாக மீம்களும் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டன. இதேபோல், சிறந்த நடிகை விருது கங்கணாவுக்கு வழங்கப்பட்டதும் சினிமா ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. பெரும்பாலான விஷயங்களில் பாஜகவுக்கு ஆதரவாக அவர் தொடர்ந்து பேசி வருவதும் இந்த விருது வழங்கப்பட்டதும் இணைத்து குறிப்பிடப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது.

***********************

அண்ணா மறைவுக்குப் பின் கருணாநிதி முதல்வரானதுபோல், ஜெயலலிதா மறைவிற்கு பின் நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். - எடப்பாடி பழனிசாமி

இடையில் கொஞ்சம் ஓபிஎஸ்ஸைக் காணோம்..! - ரஹீம் கஸ்ஸாலி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE