திரும்பவும் திருமங்கலத்து திருமகன் ஆவாரா?- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொகுதி நிலவரம்

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

அ திமுகவில் சாதாரணமான நபரும் உச்ச பதவியை அடைய முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணம், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

கமுதியிலிருந்து, பிழைப்புக்காக மதுரை வில்லாபுரம் பகுதியில் குடியேறிய போஸ் குடும்பத்தினர் அதிமுக அபிமானிகள். அப்பா கட்சியில் இருந்ததால், மகன் உதயகுமாருக்கும் அரசியல் ஆர்வம் வந்தது. அதன் காரணமாகவே சட்டமும், எம்.எஸ்.டபிள்யு படிப்பையும் முடித்தார். சட்டக்கல்லூரியில் படித்தபோது, அதிமுக மாணவரணி நடத்திய ஒரு போராட்டத்தின் மூலம் வெளிச்சம்பட்டு, மாணவரணியின் மாநில நிர்வாகியானார் உதயகுமார்.

பிறகு, ஜெலலலிதா பேரவை பொறுப்புக்கு வந்தவர், மு.க.அழகிரி அதிகார தோரணையில் இருந்த காலத்தில் மதுரைக்குள் திமுகவை எதிர்த்துத் துணிச்சலாகப் பேசி, தலைமையின் கவனத்தை ஈர்த்தார். இடையில், டாக்டர் வெங்கடேஷ் மூலம் சசிகலா குடும்பத்தையும் நெருங்கினார். விளைவாக 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் சீட் கிடைத்தது. ஜெயித்ததும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியை கொடுத்து அழகு பார்த்தது தலைமை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE