இலங்கையை எதிர்க்கத் தயங்குகிறதா இந்தியா?- தகிக்கும் தமிழ்ச் சமூகம்

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

இறுதிப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு எதிராக, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் கடும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்த, இலங்கை ராணுவத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் பொறுப்பிலிருந்து மத்திய பாஜக அரசு நழுவிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில், ஜெர்மனி, கனடா, வடக்கு மாசிடோனியா, மான்டினேக்ரோ, மலாவி ஆகிய நாடுகளின் சார்பில் பிரிட்டன் கொண்டுவந்த இந்தத் தீர்மானத்துக்கு பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அர்ஜென்டினா உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. ஜப்பான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவும் இந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்துவிட்டது. தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டாலும், இந்தியா அதை ஆதரிக்காமல் புறக்கணித்திருப்பது விவாதப் பொருளாகியிருக்கிறது.

வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE