11 தேர்தல்கள்... ஒரே தொகுதி!- உம்மன்சாண்டி தொடர் வெற்றியின் ரகசியம்

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

கேரள சட்டப்பேரவையில் தொடர்ச்சியாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியின் குரல். தமிழகத்தில், மறைந்த கருணாநிதி இதே சாதனையை நிகழ்த்தியிருந்தாலும் உம்மன்சாண்டி, தான் போட்டியிட்ட 11 தேர்தல்களிலும் ஒரே தொகுதியில் வெற்றிபெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

உம்மன்சாண்டியின் அரசியல் பயணமே வித்தியாசமானது. புதுப்பள்ளி சட்டப் பேரவை தொகுதியை உள்ளடக்கிய கோட்டயம் மாவட்டம், இடதுசாரிகளின் கோட்டை. மாணவர் காங்கிரஸால் வளர்க்கப்பட்ட உம்மன்சாண்டிக்கு அவரது 27-வது வயதில் 1970-ல் முதன்முதலாக புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இடதுசாரிகளின் கோட்டையான இந்தத் தொகுதியில், காங்கிரஸ் சீனியர்களே போட்டியிட தயங்கிய நிலையில் துணிச்சலாக களத்துக்கு வந்தார் உம்மன்சாண்டி.

அப்போது இவருக்காக பணியாற்றிய தொகுதியின் அன்றைய சீனியர்கள், “இதற்கு முன்பு நாம் இதே தொகுதியில் ஜெயித்திருந்தாலும் புதுப்பள்ளி இப்போது கம்யூனிஸ்ட்களின் கோட்டை. நம்மால் ஜெயிப்பது சிரமம். முடிவு எப்படி அமைந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை உருவாக்கிக் கொள். அநேகமாக இரண்டாம் இடம் தான் நமக்கு. அதில் மரியாதைக்குரிய வாக்குகளைப் பெறுவதற்காகப் போராடுவோம்” என்று உம்மன்சாண்டிக்கு தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே தைரியமும் தேறுதலும் சொன்னார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE