ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
அரசியல், பெண்கள் இந்த இரண்டு சொற்களும் ஒரே சமயத்தில் உச்சரிக்கப்படும்போது, உடனடியாக நினைவுக்கு வருவது ‘33 சதவீதம்’ எனும் பதம்தான். நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டாலும் மக்களவையில் இன்றுவரை நிறைவேற்றப் படவில்லை. பல மாநில சட்டப்பேரவைகளிலும் இது ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
இவ்விஷயத்தில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியிருக்கும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் இந்தத் தேர்தலில், சொற்பமான எண்ணிக்கையிலேயே பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது நெருடலைத் தருகிறது. இடதுசாரிக் கட்சிகள் உட்பட பிற கட்சிகளிலும் இதே நிலைதான்!
முந்தைய சாதனைகள்