கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
உடுமலைப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி, தொடர்ந்து நான்கு முறையாக அதிமுக வசம் உள்ள முக்கியத் தொகுதி. இதுவரை நடந்த 14 தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றிபெற்றுள்ளன.
இங்கு போட்டியிட்டு வென்ற சாதிக்பாட்சா (திமுக), குழந்தைவேலு (அதிமுக), சண்முகவேலு (அதிமுக) ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் என்பது இத்தொகுதியின் சிறப்பு. 2016-ல் இங்கு வென்ற உடுமலை ராதாகிருஷ்ணனும் அமைச்சராகவே வலம் வருகிறார். இந்த முறையும் இத்தொகுதியில் இவர்தான் நிறுத்தப்படுவார் என்றே தெரிகிறது. தொகுதிக்குள் இவரது செல்வாக்கு எப்படி இருக்கிறது? வெற்றி பெற வாய்ப்பிருக்கிறதா? பார்ப்போம்.
கேபிள் டிவி புகழ்