கரு.முத்து
muthu.k@kamadenu.in
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலிருந்து, ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்றுவரும் சட்டமன்றத் தொகுதி கரூர். ஆரம்பத்தில் காங்கிரஸுக்கு சாதகமாக இருந்த கரூர், பின்னர் பெரும்பாலும் அதிமுகவுக்கே அதிக வெற்றிகளைத் தந்தது. குறிப்பாக, கடந்த மூன்று தேர்தல்களாக அதிமுகவே இங்கு வெற்றிபெற்றிருக் கிறது. அதை நம்பி போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் களம் காண்கிறார்.
2016 தேர்தலில் முதல்முறையாக வெற்றிபெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால் செந்தில்பாலாஜிக்குப் பதிலாக அமைச்சராக்கப்பட்டவர். மற்ற விஷயங்களில் தாராளமா அள்ளித்தட்டினாலும் தொகுதிக்குள் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார். கட்சிக்காரர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் மறக்காமல் தலைக்காட்டுகிறார். யார் அழைத்தாலும் விழாக்களில் தவறாமல் கலந்துகொள்கிறார். சமீபகாலமாக, திட்டப் பணிகளைப் பார்வையிடுவது, தொடங்கிவைப்பது என்று தொகுதியைச் சுற்றிச் சுற்றிவருகிறார். தொகுதி மக்கள் இவரைச் சந்திப்பதும் எளிதாகவே இருக்கிறது.
என்னென்ன செய்தார்?