வேட்பாளர் ஆகணுமா... நாங்க இருக்கோம் வாங்க!- ‘புரட்சி’ செய்யும் புதிய பார்வைக் கூட்டணி

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

முக்கிய கட்சிகளெல்லாம் கூட்டணிக் கட்சிகளைச் சமாளிக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்க, சவுண்டே இல்லாமல் ஆறு மாசத்துக்கு முன்பே கூட்டணியை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவிச்சு பிரச்சாரத்திலும் இறங்கிருச்சு புதுசா கட்டியிருக்கிற ‘புதிய பார்வை கூட்டணி’!

அல்லுச் சில்லுகளை எல்லாம் சேர்த்து அக்கப்போரு அடிக்காமல் மொத்தமே 3 கட்சிகளை மட்டுமே கூட்டணியில் சேர்த்து, ஆளுக்கு 
60 சீட்டுன்னு அடிச்சுக்காம புடிச்சுக்காம தொகுதிப் பங்கீட்டையும் சுமூகமா முடிச்சிருக்காங்க. அப்ப... மீதி 54 தொகுதிய யாருக்கு குடுப்பாங்கன்னு நீங்க மெல்லமா கேக்குறது என் காதுல சத்தமா விழுதுங்க. அதுக்குத்தான், இப்ப ஒழுக்கமான ஆளுங்கள வலைதளம் வழியா வலைவீசித் தேடிட்டு இருக்காங்க.

‘தமிழக முற்போக்கு மக்கள் கட்சி’ தான், இந்த 3 கட்சி கூட்டணிக்குத் தலைமை. இந்தக் கட்சியோட தலைவரு க.சக்திவேல் தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்.  கூட்டணியில இருக்கிற  ‘இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சி’யின் தலைவரு சிதம்பரமும் ‘தேசிய மக்கள் சக்தி கட்சி’யோட தலைவரு ரவியும் டெபுடி சிஎம் வேட்பாளருங்களா பிரகடனம் செய்யப்பட்டுருக்காங்க!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE