சமயம் வளர்த்த சான்றோர் 13: ஆதிசங்கர பகவத் பாதர்

By காமதேனு

கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

இந்து சமயத்தின் மிக முக்கியமான அடிப்படை நூல்களான பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை உணர்த்தும் அத்வைத தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் ஆதிசங்கரர். இந்து மதத்தின் சிற்பி என்று அறியப்படும் இவர், நான்கு திசைகளிலும் மடங்களை நிறுவி, இந்து தர்ம சாஸ்திரங்களை போதிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார்.  

ஏழாம் நூற்றாண்டில் கேரள மாநிலத்தில் உள்ள ‘காலடி’ என்ற ஊரில் சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மகனாக வைகாசி மாதம் வளர்பிறை பஞ்சமியில் (788-ம் ஆண்டு) பிறந்தார் சங்கரர். இளம் வயதில் கௌடபாதரின் சீடர் கோவிந்த பகவத் பாதரிடம் வேதாந்த, அத்வைத  தத்துவங்களைப் பயின்ற சங்கரர், பின்னாட்களில் மெய்ஞான வல்லுநராகத் திகழ்ந்தமையால், ‘ஆதிசங்கர பகவத் பாதர்’  என்று அழைக்கப்பட்டார்.  

சிறுவயதிலேயே துறவறத்தில் நாட்டம் கொண்ட சங்கரர், இதுகுறித்து தன் தாயிடம் அனுமதி கேட்கிறார். ஆனால் அவரது தாய்க்கு, சங்கரர் துறவறம் பூணுவதில் விருப்பம் இல்லை. அதனால் மறுத்துவிட்டார்.  

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE