கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை வாரிவழங்கியது ஏன்?- ‘மக்கள் நீதி மய்யம்’ முரளி அப்பாஸ் பதில்

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் வேகமெடுத்து நிற்கிறது. தேர்தல் அறிக்கை, கூட்டணியை இறுதி செய்தது, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு போன்றவற்றில் திமுக, அதிமுகவையே முந்திவிட்டது மநீம. எப்படியிருக்கிறது அக்கட்சியின் வெற்றிவாய்ப்பு? செய்தித் தொடர்பாளரும், சினிமா இயக்குநருமான முரளி அப்பாஸுடன் செல்போன் வாயிலாக உரையாடினேன்.

20 தொகுதிகள் மட்டுமே கேட்ட சரத்குமாருக்கு கமல்ஹாசன்தான் வம்படியாக 40 தொகுதிகளைத் திணித்துவிட்டார் என்கிறார்களே, உண்மையா?

தமிழக அரசியலில் வார்த்தைகளை விட வாய்க்குத்தான் மதிப்பு அதிகம். யார் அந்தக் கருத்தைச் சொல்கிறார்கள் என்று மக்கள் பார்ப்பார்கள். எனவே, பிரபலமான நடிகரும், அரசியலில் மூத்தவருமான சரத்குமாரை கூட்டணியில் சேர்த்தோம். இனி தலைவர் கமல் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்தால், சரத்குமார் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்வார். சரத்குமாருக்கு அதிகப்படியாக சீட் கொடுத்திருப்பதாக கருத்துச் சொல்பவர்கள் யார் என்றால், பெரிய பெரிய கட்சிகளுக்கெல்லாம் 6 சீட் கொடுத்து அசிங்கப்படுத்தியவர்கள் தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE