குடைச்சல் கொடுக்கும் குலாம் குழாம்!- காங்கிரஸில் வெடித்திருக்கும் கலகக் குரல்கள்

By காமதேனு

வெ.சந்திரமோகன்
readers@kamadenu.in

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் காங்கிரஸுக்கு, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் சவாலை ஏற்படுத்தியிருக்கின்றன. போதாக்குறைக்கு, கட்சிக்குள்ளிருந்தே கலகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருப்பது காங்கிரஸ் தலைமைக்குக் கூடுதல் குடைச்சலை உருவாக்கியிருக்கிறது.

‘காங்கிரஸ் கட்சிக்கு முழுநேரத் தலைவர் வேண்டும்; உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதி, பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர்களில் சிலர்தான் புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார்கள். 23 தலைவர்கள் இணைந்து அந்தக்கடிதத்தை எழுதியதைத் தொடர்ந்து, அவர்கள் ‘ஜி-23’ குழுவினர் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஜம்முவில் உருவான சர்ச்சை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE