வேலுமணியே ஜெயிக்கலேனா யாருமே ஜெயிக்க முடியாது!- தொண்டாமுத்தூர் தொகுதி நிலவரம்

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

“இந்த முறையும் அதிமுகவே வென்று ஒருவேளை ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தோற்றால்... அடுத்த முதல்வர் வேலுமணிதான்” - உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியில் இப்படி ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. ‘அப்படியென்ன செல்வாக்கு வேலுமணிக்கு?’ என்று கேட்பவர்களுக்காக ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

தாமோதரனின் ஆதரவு பெற்றவர்

2004-ம் ஆண்டு கோடைகாலம். கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையே வறண்டு போனது. இதையடுத்து அப்போதைய கால்நடைத் துறை அமைச்சர் பொங்கலூர் ப.வே.தாமோதரன் தலைமையில் கோவை மேயர் மலரவனும், கோவை மாநகராட்சி கவுன்சிலர்களும் சிறுவாணிக்கே சென்று கிடா வெட்டி, பொங்கல் வைத்து மழை வேண்டி யாகம் நடத்தினார்கள். ‘ஒரு அமைச்சர் இப்படிச் செய்யலாமா?’ என ஊடகங்களில் சர்ச்சை எழுந்ததும், “அந்த நிகழ்ச்சியை நடத்தியது அமைச்சர் அல்ல, நாங்கள்தான். எதை எழுதுவதானாலும் என்னைக் கேளுங்கள்” என்று வலிந்து பேசிய எஸ்.பி.வேலுமணிக்கு அப்போது 34 வயது. அமைச்சர் தாமோதரனின் அரசியல் செல்லம். அப்போது கோவை குனியமுத்தூர் நகராட்சி தலைவராக இருந்தார் வேலுமணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE