இது அதிமுக அல்ல... ‘அமித் ஷா திமுக’!- தமிமுன் அன்சாரி தாக்கு

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் ஆறாவது ஆண்டு தொடக்கவிழா நடந்து முடிந்திருக்கிறது. கட்சி இன்னமும் காலூன்றாத நாகர்கோவிலில் விழாவை வெற்றிகரமாக நடத்தி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் எம்எல்ஏ-வுமான தமிமுன் அன்சாரி. அய்யாவழி சமயத் தலைவர் பாலபிரஜாதிபதி அடிகளார், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, பழங்குடி பாரதம் அமைப்பைச் சேர்ந்த சுரேஷ் சுவாமியார்காணி உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசையும், அதிமுகவையும் வெகுவாகச் சாடினார்கள். விழா முடிந்ததும் தமிமுன் அன்சாரியைச் சந்தித்துப் பேசினோம்.

கடந்த முறை அதிமுக அணியில் இருந்தீர்கள். இம்முறை உங்களது நிலைப்பாடு என்ன?

அதிமுக கூட்டணியில் கடந்த முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா எங்கள் கட்சியின் அரசியலை அங்கீகரித்து ஊக்குவித்தார். அவரது மறைவுக்குப் பின்னர் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்ததால், கூட்டணியைவிட்டு வெளியேறினோம். தற்போது மீண்டும் அதே கூட்டணி தொடர்ந்துவரும் நிலையில் அதை வீழ்த்தவியூகம் வகுத்துவருகிறோம். சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையிலும், தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்துவது எனும் நிலைப்பாட்டை நோக்கி நகர்கிறோம். ஒரு வாரத்தில் நல்ல முடிவு எடுப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE