ஹாட்  லீக்ஸ்: அமைச்சர் பாஸ்கரனுக்கு சீட் இல்லையா?

By காமதேனு

அமைச்சர் பாஸ்கரனுக்கு சீட் இல்லையா?

எச்.ராஜாவுக்காக காரைக்குடி தொகுதியை அதிமுக விட்டுத்தர மறுத்தால், அதற்குப் பதிலாக சிவகங்கை பாஜகவுக்குப் போகலாம் என்கிறார்கள். அப்படிபோனால் அமைச்சர் பாஸ்கர னுக்கு சீட் கிடைப்பது சிக்கல். இதனிடையே, இந்த முறை தனக்குப் பதிலாக தனது மகன் கருணாகரனை நிறுத்தப் பிரியப்படுவதாக எடப்பாடியாரிடம் சொன்னாராம் பாஸ்கரன். அதற்கு, “குடும்ப அரசியல்னு திமுகவை நாம் விமர்சிப்பது தெரியாதா? உங்களோட விருப்ப மனுவ குடுத்துட்டுப் போங்க. கட்சியில உங்களைக் காட்டிலும் சீனியர்கள் இருக்காங்க. உங்களுக்குப் பின்னால வந்தவங்கள்லயும் துடிப்பான இளைஞர் கள் இருக்காங்கன்றத மறந்துடாதீங்க” என்று எடப்பாடியார் சொன்னதால், படபடத்துக் கிடக்கிறாராம் பாஸ்கரன்.

மலைபோல நம்பும் மருது அழகுராஜ்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE