டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in
தமிழக தேர்தல் களம் வழக்கம்போல் திமுக - அதிமுகவைச் சுற்றியே தகிக்கத் தொடங்கியிருக்கிறது. புதிய கட்சிகள் தைரியமாகத் தனி ஆவர்த்தனம் காணும் வேளையில், அரசியலில் ஊறிப்போன கட்சிகள் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி, திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் கவுரவமான இடங்களைப் பெறுவதற்காக பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.
கூட்டணி விஷயத்தில் இந்தமுறை திமுக, அதிமுக என இருதரப்பின் அணுகுமுறையிலும் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. வழக்கமாக கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துப் போகும் திமுக, இம்முறை பெரியண்ணன் தோரணையில் நடத்துகிறது. வழக்கமாக கூட்டணிக் கட்சிகளை தெறிக்கவிட்டே பழகிய அதிமுகவை, இம்முறை கூட்டணிக் கட்சிகள் அலறவிட்டு வருகின்றன.
திமுகவின் திடீர் மாற்றம்