ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தும் சர்வதேச ‘வெபினார்'களுக்கு மத்திய அரசு விதித்திருக்கும் திடீர் கெடுபிடியால், சர்ச்சை வெடித்திருக்கிறது.
‘ஆன்லைன்/மெய்நிகர் கருத்தமர்வுகள், பயிலரங்கு களுக்கான புதிய வழிகாட்டுதல்’ என்ற தலைப்பில், மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை நாட்டின் அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அண்மையில் அனுப்பியது. அதில், இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து சர்வதேச இணையவழி கருத்தமர்வுகள் நடத்த மத்திய கல்வி அமைச்சகம் அனுமதிக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியே உள்விவகாரங்கள் குறித்து சர்வதேச ‘வெபினார்’ நடத்த வேண்டுமானால், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதரவும், எதிர்ப்பும்!