கே.கே.மகேஷ்
readers@kamadenu.in
வை கோவின் தொண்டர்கள் மட்டுமல்ல, அவரது மேடைப்பேச்சை மட்டும் ரசிக்கிறவர்கள்கூட இன்று அவரது நிலையைப் பார்த்துச் சங்கடப்படுகிறார்கள். உடலும் மனமும் தளர்ந்து மைக் முன் அவர் நிற்கிற காட்சியும், ஏற்ற இறக்கமின்றி சுருக்கமாகப் பேசிவிட்டு அமர்வதையும், முகத்தில் ஊக்கமோ உற்சாகமோ இல்லாமல் சின்னப் புன்னகையைக் கூட உதிர்க்க முடியாமல் மேடையில் அவர் அமர்ந்திருக்கிற காட்சியும் கலக்கம் தருகின்றன.
எந்த ஊர் தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்துக்குப் போனாலும் ஒரு வரியைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார் வைகோ. “திமுக கூட்டணியில் நமக்கு மிகக்குறைந்த இடங்கள்தான் கிடைக்கும். அப்படி குறைவான இடம் கிடைத்தால், நம் வீடுகளிலேகூட கேலி செய்வார்கள். அதற்காகக் கவலைப்படக்கூடாது. நீங்கள் வருத்தப்பட்டால், அதைவிடப் பல மடங்கு நான் வேதனைப்படுவேன்” என்று விரக்தியாகப் பேசுகிறார் வைகோ. “ஒருகாலத்தில் பாட்ஷாவாக இருந்த மனிதர், இப்போது அனைத்துக்கும் ஏசு போல பொறுமை காக்கிறாரே?” என்று கலங்கி நிற்கிறார்கள் மதிமுகவினர்.
வைகோவின் சுயமரியாதை