வாசகர்களுக்கு இன்னொரு தைத்திருவிழா!- வருகிறது சென்னை புத்தகக் காட்சி

By காமதேனு

ஜெய்
jeyakumar.r@hindutamil.co.in

பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அப்பால் இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சி நடக்கவிருக்கிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 24-ல் தொடங்கும் இந்த அறிவுலகத் திருவிழா, மார்ச் 9 வரை நடைபெறுகிறது.
வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் எனப் பல தரப்பினருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி இது. ஆனால், கரோனா பெருந்தொற்று முழுவதும் விலகிடாத இந்தச் சூழலில் இந்த புத்தகக் காட்சி எப்படி சாத்தியம், அது வெற்றிபெறுமா எனப் பல கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.

பபாசி நம்பிக்கை

பொதுவாக, டிசம்பரில் தொடங்கி ஜனவரி இரண்டாவது வாரம்வரை புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை ஒட்டிய நீண்ட விடுமுறை நாட்களைக் கணக்கிட்டுத்தான் இந்த புத்தகக் காட்சி நடைபெறும். விடுமுறை நாட்களில் கிடைக்கும் வருவாயை நம்பித்தான் புத்தகக் காட்சி அரங்குகள் இருக்கும். வாரநாட்களில் கிடைக்கும் வருவாயைவிட இரண்டிலிருந்து மூன்று மடங்கு இந்த விடுமுறை நாட்களில் அதிகம் கிடைக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE