இப்போதும் நாங்கள் காதலர்கள் தான்!- ஸர்மிளா ஸெய்யித்தின் காதல் திருமண அனுபவங்கள்

By காமதேனு

கே.சோபியா
readers@kamadenu.in

இலக்கிய உலகம் சமீபத்தில் கொண்டாடித் தீர்த்தது, எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித்தின் காதல் திருமணத்தை. இலங்கையின் இளம் தலைமுறை  எழுத்தாளரான ஸர்மிளா, தமிழகத்தில் துணிச்சலான பெண்ணியவாதியாகவும் அறியப்பட்டவர். தான் சார்ந்த இஸ்லாமிய மதத்தில் உள்ள பெண் அடிமைத்தனத்தை விமர்சிப்பவர் என்கிற முறையில் ஸர்மிளாவுக்கு சமூக வலைதளங்களில் எதிரிகள் அதிகம். இந்தப் பின்னணியால் அவரது காதல் திருமணம் கூடுதல் கவனம்பெற்றது.

இவரது காதல் ஒரு அற்புதம் என்றால், அந்தக் காதலுக்கு குடும்பத்தினரின் சம்மதத்தைப் பெற்றது இன்னும் பிரமிப்பான விஷயம். காரணம், இவர் ஏற்கெனவே திருமணமாகி மணவிலக்கு பெற்றவர். இரண்டு மகன்கள். மூத்தவனுக்கு 12 வயது. இரண்டு பெண் பிள்ளைகளையும் தத்தெடுத்து வளர்க்கிறார்.  “எப்படி உங்கள் காதலுக்கு குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெற்றீர்கள், குறிப்பாக, உங்கள் மகனிடம்?” என்று கேட்டோம்.

“விஷயத்தைச் சொன்னதுமே பையன் கேட்ட கேள்வி, ‘என்னையும் உங்களையும் அவர் பிரிச்சுடுவாரா மம்மீ?' என்பதுதான். இந்தக் கேள்வியின் பதற்றம் என்னை விட்டு அகல நீண்ட நாட்களானது. ஒரு பெண் மறுமணத்துக்குத் தயங்க இதுபோன்ற கேள்வியும் ஒரு காரணம். பிறந்தது முதல் இன்று வரைக்கும் அவன் எனது கைகளுக்குள்ளேயே வளர்ந்த குழந்தை. புதிய ஆண் உறவும் வரவும் அவனைப் பதற்றப்படுத்துவது இயல்பானது; புரிந்து கொள்ளக்கூடியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE