சின்னம்மாவும் கதறும் அதிமுகவும்

By காமதேனு

சசிகலா விடுதலையால் தமிழக அரசியல் மேலும் சூடுபிடித்திருக்கிறது. அதிமுகவினர் ஒருபக்கம் என்ன ஆகுமோ என்ற பதற்றத்தில் இருக்கிறார்கள். மறுபக்கம் திமுகவினர் சசிகலாவின் வருகையை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைதளங்களில் சின்னம்மாவும் அதிமுகவும் தான் இப்போது ட்ரெண்டிங். ‘அதிமுக அலுவலகம், போயஸ் கார்டன் என அனைத்தையும் மூடிக்கொண்டிருக்கிறார்கள். தான் மட்டுமே ஜெயலலிதாவுக்கு எல்லாமுமாய் இருக்கவேண்டும் என்று, ஜெயலலிதாவின் உறவினர்கள், அவரது நலம் விரும்பிகள் உள்ளிட்ட யாரையும் போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்த சசிகலாவே இன்று போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை’ என்று வறுக்கிறார்கள் நெட்டிசன்கள். இனி என்ன ஆகும் என்று ரொம்பவே ஆர்வமாக கவனிக்கிறது தமிழக அரசியல் களம்!

விவாதத்திற்கு அழைத்தால் ஸ்டாலின் வர மறுக்கிறார்.- ஈபிஎஸ்

ஆ.ராசா ரெடியா தான் இருக்காராம்... போறீங்களா!- தமிழன்டா

வரும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன்.- தினகரன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE