ஓடிடி தமிழ் ஃபர்னிச்சர்கள்!

By காமதேனு

கரோனா காலத்தில் மக்களுக்கு ஓடிடி தான் ஒரே பொழுதுபோக்கு. ஆனால், தமிழில் இதுவரை வெளியான ஓடிடி திரைப்படங்கள் அனைத்துமே அதிகமாக எதிர்மறை விமர்சனங்களுக்குத்தான் ஆளாகியிருக்கின்றன. பொன்மகள் வந்தாள், பென்குயின், சூரரைப்போற்று, பாவக்கதைகள், மாறா, அந்தகாரம், பூமி என அனைத்துமே கடும் விமர்சனங்களுக்கு ஆளாயின. இதில் சமீபத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது பூமி. விவசாயிகளின் பிரச்சினைகளை ஆழமாகப் பேசியது இந்தப் படம். எனினும் எதிர்மறை விமர்சனங்களே அதிகம் வந்து விழுந்தன. இதையெல்லாம் பார்த்து விட்டு வெந்து நொந்துபோன பூமி படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மண், ‘இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்’ என்று ட்விட் செய்தது ஆதங்கத்தின் உச்சம். ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்கள் இப்படியான விமர்சனங்களைச் சந்தித்தாலும் பிற மொழிகளில் வெளியாகும் ஓடிடி படங்கள் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. பொழுதுபோக்குக்கும் கலைக்கும் நியாயம் செய்வதாக இருக்கின்றன. தமிழுக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்பதே சினிமா ஆர்வலர்களின் கேள்வியாக இருக்கிறது.

டொனால்டு டிரம்ப் பதவிக்காலத்தில், 30,573 பொய்கள் பொதுவெளியில் பேசியுள்ளார். - ஆய்வில் தகவல்
அப்ப.. நாங்கனாப்புல யாரு - மோடி மைண்ட் வாய்ஸ். - இசை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்பதற்கு பதிலாக முலாயம் சிங் என்று கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
முலாயம் சிங் பெயரையெல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்காரேன்னு சந்தோசப்படுங்க அப்பு! - பச்சை பெருமாள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என்றால் பொதுவாழ்க்கையிலிருந்து விலகத் தயார். - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
போறது தான் போறீங்க அந்த ஒற்றைச் செங்கலை கையோட எடுத்துட்டுப் போங்க!- மித்ரன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE