சினிமாவை விட நிஜ சிறார் சிறை பயங்கரமானது!- ரியல் மாஸ்டரின் நினைவலைகள்

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்குள் சகஜமாகப் புழங்கும் போதை வஸ்துகள், சிறார் சிறையில் இருப்பவர்களை மையமாக வைத்து அரங்கேற்றப்படும் குற்றச்சம்பவங்கள் என பேசியது பொங்கலுக்கு வெளியான ‘மாஸ்டர்' திரைப்படம். சிறார் சிறை அக்கிரமங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, தட்டிக்கேட்கும்  மாஸ்டர்  ஜேடியாக வந்து கவனம் குவித்திருக்கிறார் நடிகர் விஜய். தமிழகத்தில் உண்மையில் சிறார் சிறைகள் அப்படித்தான் இருக்கிறதா?

சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த படைப்பாளி முளங்குழி பா.லாசர். சிறார் சிறையில் பாடம் எடுத்தபோது தனக்கு நேர்ந்த அனுபவங்களை முன்வைத்து இவர் எழுதிய ‘இளங்குற்றவாளிகள் உருவாகுவது ஏன்?’  புத்தகம் இலக்கிய உலகில் கவனம் பெற்றது. குமரி முத்தமிழ் மன்றத்தை நிறுவி அரை நூற்றாண்டாகத் தமிழ்ப் பணி செய்துவரும் லாசருக்கு, இந்த ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த மகிழ்ச்சியில் இருந்தவர் காமதேனுவுக்காக நம்மிடம் சிறார் சிறைகள் குறித்து மனம் விட்டுப் பேசினார்.
குற்றம் இழைக்கும் சிறைப் பணியாளர்கள்!

 “சின்ன வயதில் இருந்தே வாசிப்பு ஆர்வம் அதிகம். எங்க ஊரில இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில இருக்கும் உண்ணாமலைக்கடை நூலகத்துக்கு நடந்தே போய் படிப்பேன். சமூகநலத் துறையில் சிறைச்சாலையில் தமிழாசிரியர்கள் தேவைன்னு அறிவிப்பு வந்ததும் தேர்வு எழுதி பாஸானேன். எனக்கு தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறையில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வேலை கிடைச்சுது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE