இரண்டு பக்கமும் பேரம் பேசுகிறதா பாமக?- வழக்கறிஞர் கே.பாலு பளிச் பதில்

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

அதிமுக கூட்டணியில் தொடர்வோம் என்று அறிவிக்கவும் முடியவில்லை, திமுக கூட்டணிக்கு அழையா விருந்தாளியாகப் போகவும் மனமில்லை என்பதால் அந்தரத்தில் நிற்கிறது பாமக. இந்தச் சூழலில் பாமகவின் சட்டப்பேரவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு காமதேனு மின்னிதழுக்கு அளித்த பேட்டி.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடைப் பாதுகாப்பதே சவாலாக இருக்கிறபோது, வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்பது உள்ளதையும் கெடுத்துவிடாதா?

தனி இடஒதுக்கீடு என்ற கொள்கையை சற்றுத் தளர்த்தி, ஏற்கெனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இருக்கும் 20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும் என்று தான் போராடுகிறோம். காரணம், எம்பிசி பிரிவில் உள்ள 108 சாதிகளில் வன்னியர்கள்தான் பெரும்பான்மை என்றாலும், இன்னமும் வன்னியர்கள் ஏழை விவசாயிகளாக, கூலிகளாக, படிப்பறிவு அற்றவர்களாக, மதுவுக்கு அடிமையானவர்களாகவே இருக்கிறார்கள். எம்பிசி இடஒதுக்கீட்டின் பயன் அவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட 6 எம்பிசி சப் கலெக்டர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை என்பதே அதற்குச் சான்று.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE