திக்குத் தெரியாமல் அலையும் தேமுதிக!- பேர அரசியலால் பெயரைக் கெடுத்துக் கொண்ட விஜயகாந்த்

By காமதேனு

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், பிரதான கட்சிகள் சுற்றிச் சுழலத் தொடங்கிவிட்டன. ஆனால், தேமுதிக மட்டும் திக்குத் தெரியாத காட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறது.

அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளை டார்க்கெட் வைக்கும் தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த், “எடப்பாடி பழனிசாமி மக்களால் தெரிவான முதல்வர் அல்ல. ஒரு பெண் என்ற முறையில் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்” என்று கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே பேசி அதிமுக வட்டாரத்தை முகம் சுளிக்க வைத்திருக்கிறார். ஆனாலும் ஆளும் கட்சி தேமுதிகவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. 

கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் விஜயகாந்தின் கடைக்கண் பார்வைக்காகப் பிற கட்சிகள் காத்திருந்த காட்சிகள் எல்லாம் இன்று மலையேறிவிட்டன. அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டே “தனித்துப் போட்டியிடுவோம்... மூன்றாவது அணி அமைப்போம்... 41 சீட்டுகள் தரும் கட்சியுடன்தான் கூட்டணி... பாமகவுக்கு இணையாகத் தொகுதிகளைக் கேட்போம்” என்றெல்லாம் தேமுதிக பேசிக்கொண்டே இருக்கிறது. ஆனால், காதுகொடுத்துக் கேட்கத்தான் ஆளில்லை. தேமுதிகவின் இந்த நிலைக்கு என்ன காரணம்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE