30 தொகுதிகளிலும் நாங்களே போட்டியிடுவோம்!- காங்கிரஸுக்கு புளியைக் கரைக்கும் புதுச்சேரி திமுக

By காமதேனு

எம்.கபிலன்
readers@kamadenu.in

அதிமுக கூட்டணியில் நிலவும் குழப்பத்தைப் பற்றியே இதுவரை அதிகம் பேசப்பட்டுவந்த நிலையில், புதுச்சேரியில் திமுக கையில் எடுத்திருக்கும் புதிய அஸ்திரத்தால், ‘திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் விரிசலா?’ எனும் விவாதம் வேகமாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிக இடங்களில் திமுக நிற்க வேண்டும் என்றும், அதற்காகக் காங்கிரஸைக் கைகழுவ வேண்டும் என்றும் திமுக தலைமையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம். ஆனால், காங்கிரஸ் தலைமையிடம் உள்ள நெருக்கம், சிறுபான்மையினரின் வாக்குகள் உள்ளிட்ட காரணிகளால் திமுக தலைமை இதற்கு தயக்கம் காட்டுகிறது. 20 தொகுதிகளையாவது கொடுத்து காங்கிரஸைக் கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் திமுக போடும் கணக்கு.

அதேசமயம், தமிழக அரசியலில் எடுத்திருக்கும் இந்த நிலைப்பாட்டைப் புதுச்சேரியில் நீட்டிக்க திமுக தயாராக இல்லை என்பது பட்டவர்த்தனமாகிவிட்டது. “புதுச்சேரியின் முப்பது தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடும். அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும். இல்லாவிட்டால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று புதுச்சேரிக்கான திமுக மேலிடப் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் பேசியிருப்பது புதிய புயலைக் கிளப்பியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE