தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்... கண்ணீரில் கருகும் விவசாயிகள்..!

By காமதேனு

கரு.முத்து / கா.சு.வேலாயுதன்
readers@kamadenu.in

‘தை பிறந்துவிட்டது, இனி வழி பிறந்துவிடும்’ என்று எதிர்பார்ப்புக்களுடன் இருந்த தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்தக் கனவையும் உருக்குலைத்திருக்கிறது பருவம் தவறி பெய்த மழை.

காவிரிப் படுகையில் மட்டும் 15 லட்சம் ஏக்கரும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருமாக சுமார் 20 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் மழையால் பாழாகியிருக்கின்றன. அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி, அழுகி, முளைத்துப்போய் கிடக்கின்றன.

2020 ஜூன் மாதத்தில் முறைப்படி தண்ணீர் திறக்கப்பட்டு சாகுபடியும் இனிதே தொடங்கியது. கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் பருவமழையும் மிதமாகப் பெய்யத் தொடங்கியது. அதனால் பெருத்த நம்பிக்கையோடு சிறு இடத்தைக்கூட தரிசாகப் போடாமல் முழுமையாகச் சாகுபடி செய்திருந்தனர் விவசாயிகள். குறுவையும் குறிப்பிட்ட பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, நல்ல முறையில் அறுவடை செய்யப்பட்டதால் சம்பாவும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகளின் மனதில் துளிர்த்திருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE