நிஷா
readers@kamadenu.in
சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் உலகெங்கும் பரவி, ஒட்டுமொத்த மனித குலத்தையும் உலுக்கியெடுத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை ஏழரைக் கோடிக்கு அதிகமானோர் தொற்றுக்குள்ளாகி இருக்கும் நிலையில், பதினேழு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக் கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், வன விலங்குகளுக்கும் இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று வெளியாகியிருக்கும் செய்தி மேலும் அதிர்ச்சி தருகிறது.
விலங்குகளுக்குக் கரோனா தொற்று ஏற்பட்ட செய்திகள் புதிதல்ல. அமெரிக்காவின் வன விலங்குப் பூங்காக்களில் வாழும் புலிகள், சிங்கங்கள், பனிச் சிறுத்தைகள் ஆகியவற்றுக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளும் நாய்களும்கூட கரோனா வைரஸினால் பாதிப்புக்கு உள்ளாகின. ஆனால், இவை வளர்ப்புப் பிராணிகள் என்பதும், இவற்றின் மூலம் மனிதர்களுக்குக் கரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் விளக்கமளித்ததும் கவனிக்கத்தக்கவை. தற்போது தொற்றுக்குள்ளாகியிருக்கும் விலங்கு, மனிதத் தொடர்புகள் இல்லாத வன விலங்கு என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
பண்ணைக்கு வெளியே…